حول العالمالقرآن الكريمالرئيسية
القرآن الكريم

Al-'adiyat (Those That Run) – தமிழ் மொழிபெயர்ப்பு மற்றும் அரபு மூலம்

About Surah Al-'Adiyat (The Courser)

  • Surah 100 of 114
  • Meccan
  • 11 verses
  • Arabic name: العاديات

Surah Al-'Adiyat (العاديات), "The Courser", is a Meccan surah with 11 verses. On Around The World every verse has its own page that brings together the Arabic text, the Sa'di and Jalalayn tafsir, the English meaning and related topics. Choose a verse number below.

All 11 verses: choose one for its tafsir

Surah Al-'adiyat ( Those That Run ) - தமிழ்

Surah Al-'adiyat ( Those That Run ) - Aya count 11

Al-'adiyat (Those That Run) 11 வசனங்களைக் கொண்ட ஒரு மக்கீ அத்தியாயம். இது குர்ஆனின் 100-வது அத்தியாயமாகும்; மதீனா முஸ்ஹஃபின் 599-வது பக்கத்தில் தொடங்குகிறது.

سورة العاديات مكية، عدد آياتها 11، وترتيبها 100 في المصحف، وتبدأ في الصفحة 599 من مصحف المدينة النبوية.

سورة العاديات بالعربية · الصفحة 599 من المصحف · تفسير السورة

وَٱلْعَٰدِيَٰتِ ضَبْحًۭا ﴿١﴾

மூச்சுத்திணற விரைந்து ஓடுபவற்றின் (குதிரைகள்) மீது சத்தியமாக-

فَٱلْمُورِيَٰتِ قَدْحًۭا ﴿٢﴾

பின்னர், (குளம்பை) அடித்து நெருப்புப் பறக்கச் செய்பவற்றின் மீதும்,

فَٱلْمُغِيرَٰتِ صُبْحًۭا ﴿٣﴾

பின்னர், அதிகாலையில் விரைந்து (எதிரிகள் மீது) பாய்ந்து செல்பவற்றின் மீதும்-

فَأَثَرْنَ بِهِۦ نَقْعًۭا ﴿٤﴾

மேலும், அதனால் புழுதியைக் கிளப்புகின்றவற்றின் மீதும்,

فَوَسَطْنَ بِهِۦ جَمْعًا ﴿٥﴾

அப்பால் (பகைப்படையின்) மத்தியில் கூட்டமாக நுழைந்து செல்பவற்றின் மீதும் சத்தியமாக-

إِنَّ ٱلْإِنسَٰنَ لِرَبِّهِۦ لَكَنُودٌۭ ﴿٦﴾

நிச்சயமாக, மனிதன் தன் இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கின்றான்.

وَإِنَّهُۥ عَلَىٰ ذَٰلِكَ لَشَهِيدٌۭ ﴿٧﴾

அன்றியும், நிச்சயமாக அவனே இதற்குச் சாட்சியாகவும் இருக்கின்றான்.

وَإِنَّهُۥ لِحُبِّ ٱلْخَيْرِ لَشَدِيدٌ ﴿٨﴾

இன்னும், நிச்சயமாக அவன் பொருளை நேசிப்பதில் அளவு கடந்தே இருக்கின்றான்.

۞ أَفَلَا يَعْلَمُ إِذَا بُعْثِرَ مَا فِى ٱلْقُبُورِ ﴿٩﴾

அவன் அறிந்து கொள்ளவில்லையா? கப்றுகளிலிருந்து, அவற்றிலிருப்பவை எழுப்பப்படும் போது-

وَحُصِّلَ مَا فِى ٱلصُّدُورِ ﴿١٠﴾

மேலும், இதயங்களில் உள்ளவை வெளியாக்கப்படும் போது-

إِنَّ رَبَّهُم بِهِمْ يَوْمَئِذٍۢ لَّخَبِيرٌۢ ﴿١١﴾

நிச்சயமாக, அவர்களுடைய இறைவன் அவர்களைப்பற்றி, அந்நாளில் நன்கறிந்தவன்.