حول العالمالقرآن الكريمالرئيسية
القرآن الكريم

Ad-Dhuha (The Forenoon) – தமிழ் மொழிபெயர்ப்பு மற்றும் அரபு மூலம்

About Surah Ad-Duhaa (The Morning Hours)

  • Surah 93 of 114
  • Meccan
  • 11 verses
  • Arabic name: الضحى

Surah Ad-Duhaa (الضحى), "The Morning Hours", is a Meccan surah with 11 verses. On Around The World every verse has its own page that brings together the Arabic text, the Sa'di and Jalalayn tafsir, the English meaning and related topics. Choose a verse number below.

All 11 verses: choose one for its tafsir

Surah Ad-Dhuha ( The Forenoon ) - தமிழ்

Surah Ad-Dhuha ( The Forenoon ) - Aya count 11

Ad-Dhuha (The Forenoon) 11 வசனங்களைக் கொண்ட ஒரு மக்கீ அத்தியாயம். இது குர்ஆனின் 93-வது அத்தியாயமாகும்; மதீனா முஸ்ஹஃபின் 596-வது பக்கத்தில் தொடங்குகிறது.

سورة الضحى مكية، عدد آياتها 11، وترتيبها 93 في المصحف، وتبدأ في الصفحة 596 من مصحف المدينة النبوية.

سورة الضحى بالعربية · الصفحة 596 من المصحف · تفسير السورة

وَٱلضُّحَىٰ ﴿١﴾

முற்பகல் மீது சத்தியமாக

وَٱلَّيْلِ إِذَا سَجَىٰ ﴿٢﴾

ஒடுங்கிக் கொள்ளும் இரவின் மீது சத்தியமாக-

مَا وَدَّعَكَ رَبُّكَ وَمَا قَلَىٰ ﴿٣﴾

உம்முடைய இறைவன் உம்மைக் கை விடவுமில்லை; அவன் (உம்மை) வெறுக்கவுமில்லை.

وَلَلْءَاخِرَةُ خَيْرٌۭ لَّكَ مِنَ ٱلْأُولَىٰ ﴿٤﴾

மேலும் பிந்தியது (மறுமை) முந்தியதை (இம்மையை) விட உமக்கு மேலானதாகும்.

وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَىٰٓ ﴿٥﴾

இன்னும், உம்முடைய இறைவன் வெகு சீக்கிரம் உமக்கு (உயர் பதவிகளைக்) கொடுப்பான்; அப்பொழுது நீர் திருப்தியடைவீர்.

أَلَمْ يَجِدْكَ يَتِيمًۭا فَـَٔاوَىٰ ﴿٦﴾

(நபியே!) அவன் உம்மை அநாதையாகக் கண்டு, அப்பால் (உமக்குப்) புகலிடமளிக்கவில்லையா?

وَوَجَدَكَ ضَآلًّۭا فَهَدَىٰ ﴿٧﴾

இன்னும், உம்மை வழியற்றவராகக் கண்டு அவன், (உம்மை) நேர்வழியில் செலுத்தினான்.

وَوَجَدَكَ عَآئِلًۭا فَأَغْنَىٰ ﴿٨﴾

மேலும், அவன் உம்மைத் தேவையுடையவராகக்கண்டு, (உம்மைச் செல்வத்தால்) தேவையில்லாதவராக்கினான்.

فَأَمَّا ٱلْيَتِيمَ فَلَا تَقْهَرْ ﴿٩﴾

எனவே, நீர் அநாதையைக் கடிந்து கொள்ளாதீர்.

وَأَمَّا ٱلسَّآئِلَ فَلَا تَنْهَرْ ﴿١٠﴾

யாசிப்போரை விரட்டாதீர்.

وَأَمَّا بِنِعْمَةِ رَبِّكَ فَحَدِّثْ ﴿١١﴾

மேலும், உம்முடைய இறைவனின் அருட்கொடையைப் பற்றி (பிறருக்கு) அறிவித்துக் கொண்டிருப்பீராக.